முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 5 மே, 2015

திருப்பூரில் நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம்

02 / 05 / 2015 அன்று காலை அரண்மனை புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் நகரில் முதன் முறையாக நடைபெற்றது.



மாவட்டத் தலைவர் திரு.செந்தில் குமாரின் பங்கேற்பில் மாவட்டச் செயலாளர் திரு. அர்ச்சுனன் தலைமை வகித்தார். தங்கமணி மற்றும் வனிதா ஆகியோர் வரவேற்புரை வழங்கினர். மாவட்ட அமைப்பாளர் திரு. தண்டபாணி, மாவட்டத் துணைத்தலைவர் திரு.ஆத்தியப்பன் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் திரு.மரியன் தென்வாலியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் மாநில பொருளாளர் திரு. நாகை ஜான்சன் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார். இறுதியாக யசோதா அவர்கள் நன்றியுரை வழங்கினார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் மாநில செய்தித் தொடர்பாளர் திரு. பொன். சங்கர் திருப்பூர் நகரில் முதன்முறையாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கூடியிருப்பதால் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் ஒருமைப்பாடு மற்றும் செய்திதொடர்பு குறித்த விழிப்புணர்வு பற்றிய தமது கருத்து மற்றும் செய்தி விளக்கத்தைப் பதிவு செய்தார்.


பொன். சங்கர்
மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக