கர்நாடகா எம்.எல்.ஏ.,க்கள் வாங்கும் ஊதியத்தை உயர்த்தும் மசோதா, வரும் சட்டசபை கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்படி, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களும், ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு இணையாக, மாதம், 1.23 லட்சம் ரூபாய் ஊதியம் பெற வாய்ப்புள்ளது. தற்போது, எம்.எல்.ஏ.,க்கள், மாதத்திற்கு, மற்ற படிகள் உட்பட, 65 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். மாநிலத்துக்குள் நடக்கும் சட்டசபை கூட்டத் தொடருக்கு, தினமும், 1,000 ரூபாயும், மாநிலத்துக்கு வெளியே கூட்டம் எனில், 1,500 ரூபாய் வழங்கப்படும்.
அலவன்ஸ்:
தற்போது புதிய மசோதாவின் படி, நாள்தோறும் வழங்கப்படும் அலவன்ஸ் மற்றும் பயண படியை, 1,500 ரூபாயாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவில் இடம்பெற்ற இரு அவை அதிகாரிகளும், இணைந்து, இந்த ஊதிய உயர்வு மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன், கவர்னர் ஒப்புதல் பெற வேண்டும்.
ஊதியம்:
கடந்த, 2011ல் தான், எம்.எல்.ஏ.,க்கள் ஊதியம் சீரமைக்கப்பட்டது. வருமான வரி செலுத்த வேண்டி வருமே என்பதற்காக, 'மற்ற சலுகைகளை வேண்டுமானால், 100 சதவீதம் உயர்த்தட்டும்; ஊதியத்தில் வேண்டாம்' என, பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் கூறுகின்றனர்.
எம்.எல்.ஏ.,க்கள் ஊதிய விவரம்
விவரம் - பழைய சம்பளம் - புதிய சம்பளம்
அடிப்படை சம்பளம் - ரூ.20,000 - ரூ.38,000
டெலிபோன் கட்டணம் - ரூ.15,000 - ரூ.30,000
தொகுதி அலவன்ஸ் - ரூ.15,000 - ரூ.30,000
தபால் செலவு - ரூ.5,000 - ரூ.10,000
உதவியாளர் மற்றும் ரூம் பாய் கட்டணம் - ரூ.10,000 - ரூ.15,000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக