முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 8 டிசம்பர், 2014

சிறப்பாசிரியர்கள் நியமிக்கும் முடிவில் அ.தி.மு.க. அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கலைஞர்


திமுக தலைவர் கலைஞர் 07.12.2014 ஞாயிற்றுக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

கேள்வி:- அரசுப் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த வரிசையிலேதான் நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை பற்றி?

கலைஞர் :- அரசுப் பள்ளிகளிலே சிறப்பாசிரியர்களை நியமிக்கும்போது தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேதான் மேற்கொள்ளப்படும் என்றும், வேலைவாய்ப்புப் பதிவு மூப்புக்கு முன்னுரிமை கிடையாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

அரசின் இந்த அறிவிப்பு, பல ஆண்டுக்காலமாக வேலைவாய்ப்பு அலுவலகத்திலே பதிவு செய்து விட்டு காத்திருக்கும் சிறப்பாசிரியர்களையும் அரசுப் பள்ளிகளில் மூன்றாண்டுகளாகப் பணியாற்றி வரும் பல ஆயிரக்கணக்கான பகுதி நேர சிறப்பாசிரியர்களையும் பெரிதும் பாதிக்கக்கூடிய முடிவாகத்தான் அமையும். 

மேலும் இடைநிலை மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்துக்குத் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது பற்றியும், அதிலே மதிப்பெண்கள் வழங்கப்பட்டு “வெயிட்டேஜ்” அறிமுகப்படுத்தப் பட்டது பற்றியும் பிரச்சினைகள் ஏற்கனவே உள்ளன. அதிலே மேலும் ஒரு பிரச்சினையாக - இசை, ஓவியம், தையல் போன்ற கலைப் படிப்புகளைக் கற்பிக்கும் சிறப்பாசிரியர்களுக்கும் தகுதித் தேர்வின் மூலமாக நியமனம் என்பது சரியான முடிவல்ல.

எனவே பல ஆயிரக்கணக்கான சிறப்பாசிரியர்களைப் பெரிதும் பாதிக்கும் இந்த முடிவினை அ.தி.மு.க. அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக