அரியலூர் : தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கம் சார்பில், அரியலூர் மாவட்ட அளவில் நடந்த பகுதி நேர ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் இளவரசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் பிரபாகரன் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சின்னசாமி, அரியலூர் ஒன்றிய தலைவர் சாரங்கபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஏழு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு அளித்த தமிழக அரசுக்கும், எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குநருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பகுதி நேர ஆசிரியர்கள் நலன் கருதி, தமிழக அளவில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு, அரியலூர் மாவட்ட அளவில் முழு ஒத்துழைப்பு தருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர் இளவரசன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக