முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 2 டிசம்பர், 2014

இன்று சர்வ தேச அடிமைகள் ஒழிப்பு தினம்

உலகில் யாரும் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது. நாட்டிற்கோ, சமூகத்துக்கோ, கலாசாரத்துக்கோ, தனிப்பட்ட நபருக்கோ அடிமைத்தனமாக வாழ்பவர்களை, மீட்டெடுக்கும் வகையில் ஐ.நா,. சார்பில் டிச., 2ம் தேதி, சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.



போரில் தோல்வி அடைந்த நாட்டினரை, அடிமைகளாகச் சிறையில் வைக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. நாளடைவில் கைதிகளை சாதகமான வழியில் பயன்படுத்த தொடங்கினர். இவ்வாறு தொடங்கியது தான் அடிமைப் பணி. ஐரோப்பிய நாடுகள், காலனி நாட்டு மக்களை அடிமைகளாக்கினர். உரிய மதிப்பு:தற்போதைய நவீன உலகிலும், அடிமைகள் இருக்கின்றனர்.

கட்டாயப்படுத்தி வேலை பார்ப்பவர்கள், கடத்தப்படுதல், கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர், பாலியல் தொழிலாளர் என பல வழிகளில் இன்னல்படுகின்றனர். ஒவ்வொருவரும், மற்றவரின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க இத்தினத்தில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக