பதிவு செய்த நேரம்:2014-12-15 10:33:39
பெரம்பலூர்,: பகுதிநேரஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டுமென தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட் டம், பெரம்பலூர்அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று காலை 11மணிக்கு நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணித் தலைவி ஸ்ரீலேகா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஹிர்பாஷா வரவேற்றார். சங்கத்தின் மாநிலத்தலைவர் ராமர், மாநில துணைத் தலைவர்கள் பெரியசாமி, இளவரசன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென அரசைக் கேட்டுக்கொள்வது, பகுதிநேர சிறப்பாசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகம் தழுவிய அளவில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பாக முழுமை யான ஒத்துழைப்பை வழங்குவது என்பன உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட் டத் தில் சங்கத்தின் மாவட்ட நிர்வணீ£கிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். மாவட்டப்பொரு ளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக