கணினிப் பயிற்றுநர் நேரடி நியமனத்துக்கு தகுதி வாய்ந்தவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புப் பட்டியலை சென்னைமாவட்ட வேலைவாய்ப்பு வெளியிட்டது. தமிழக பள்ளி கல்வித் துறையில் 652 கணினி பயிற்றுநர்பணியிடங்கள் நேரடி நியமன முறையில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்புஅடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இதற்காக, பி.எஸ்.ஸி., பி.எட்., கணினி அறிவியல், பி.சி.ஏ., பி.எட்.முடித்த குறைந்தபட்சம் 18 முதல் 57 வயது வரை உள்ளவர்களின்பதிவு மூப்புப் பட்டியல் வேலை வாய்ப்பு அலுவலக இணையதளத்தில்வெளியிடப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம்வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகஇணையதளத்தில் வெளியிடப்படும் பதிவு மூப்புப் பட்டியலில்தங்களின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை தகுதியானவர்கள்பார்த்துக்கொள்வது அவசியம்.
அதில், ஏதாவது குறைகள் இருக்குமானால், டிசம்பர் 12-ஆம்தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொண்டுநிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
இந்த நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 24-ஆம் தேதிமுதல் 30-ஆம் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் தகுதியானவர்களுக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியஇணையதளத்திலும் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக