முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 11 நவம்பர், 2014

திருவள்ளூர் மாவட்ட பகுதி நேர ஆசிிரயர்களின் ஆலோசனை கூட்டம் - விவரம்

அரச மரத்தடியில் துவங்கியது புதிய சங்கம் 

திருவள்ளூர் மாவட்ட பகுதி நேர ஆசிிரயர்களின் ஆலோசனை கூட்டம் 9-11-14 அன்று திருத்தணி திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், 150 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக, ஆர்.கே.பேட்டை வட்டார ஆசிரியர் பயிற்றுனர் பழனி மற்றும் தொலைதொடர்பு துறை தியாகராஜன் கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றினர்.

அரசமரத்தடியில் நடந்த கூட்டத்திற்கு வந்து சிறப்பித்த சிறப்பு விருந்தனர்களுக்காக, அருகில் உள்ள மண்டபத்தில் சென்று இரண்டு இருக்கைகள் கடனாக பெற்று வந்து அமரச் செய்ய வேண்டிய தர்மசங்கடமான நிலை ஏற்ப்ட்டது.



மிக எளிமையாக நடந்த கூட்டமானாலும், மிக சிறப்பாக நடந்தது. திரு. பழனி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட ஏளனங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு, தற்போது இந்த நிலைக்கு வந்தது குறித்து பேசினார். இதில் தன்னலம் துளியும் இல்லை. 4,000 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து தான்,மாநில தற்காலிக உதவியாளர்கள் சங்கம் துவங்கி அதன் மூலம் போராடி பெற்ற உரிமைகளை நினைவு கூர்ந்தார்.

மேலும், கடமையை செய்யுங்கள், பிரச்சனை வந்தால் அதை எதிர்கொள்ள நான் உதவுகிறேன் என்று கூறி சங்கம் அமைக்கவும் அதை இன்றே இ்பபோதே துவங்குங்கள் என்று கூறி, தலைவர் பொருளாளர் என, 20 பேரை தேர்வு செய்து நியமனம் செய்து வைத்தார். காலை 10:30 மணிக்கு துவங்கிய கூட்டம் பகல் 2:00 மணிக்கு நிறைவடைந்தது. வளமான எதிர்காலத்திற்கு முதல் படியை மிதித்த திருப்தியுடன் ஆசிரியர்கள் பிரிந்து சென்றனர்.

- முகநூலிலிருந்து ஏழுமலை பாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக