முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 11 நவம்பர், 2014

பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை நிலை குறித்து திரு. பொன். சங்கர் அவர்களின் 10.11.14 அன்றைய செய்தியறிக்கை

சென்னையில் இன்று (10/11/2014) தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சேர்மன் திரு. சோலை M ராஜா அவர்கள் தலைமையில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள், கல்வி அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து பகுதிநேர சிறப்பாசிரியர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பினர். 

இதில், மாநிலத் தலைவர் திரு. கு.சேசுராஜா, திரு.ஜெயச்சந்திர பூபதி, மாநில செயலாளர் திரு.D.ராஜா தேவகாந்த், மாநில பொருளாளர் திரு.ஜான்சன், திரு. இருளாண்டி - தேனி, திரு. இளமதி - ஈரோடு, திரு.சுரேஸ் - திருச்சி மற்றும் திரு. சுப்பிரமணி - தூத்துக்குடி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

நமது கேள்விகளுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் (தேதி குறிப்பிடாமல்) என்று பதிலளித்தனர். பணி நிரந்தரம், பணி மாறுதல் முதலான மற்ற கோரிக்கைகளையும் கேட்டறிந்து கொண்டனர். உடனடியாக தீர்வு காண்பதற்கான வாய்ப்பு அமையவில்லை.

இச்சந்திப்பின் முக்கிய அம்சமாக, வரும் திங்கள் கிழமை மாலை 4.00 மணிக்கு கல்வித்துறை அமைச்சர் முதலாக மற்ற கல்வித்துறை அதிகாரிகளுடன் பகுதிநேர ஆசிரியர்களின் நிலைகுறித்து நமது குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திட ஒப்புதல் கிடைத்துள்ளது. அதன் பின்னரே நமது நிலை தெளிவுபடும்.

எனவே, நடைபெறப்போகும் இந்தப் பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.அதற்கு நாம் தயாராக உள்ளோம். மிக முக்கியமாக பகுதிநேர ஆசிரியர்களாகிய உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம். மேலும் இடுகைத்தளத்திலும், முகநூலிலும் பாதிக்கப்பட்டுவரும் பகுதிதேர ஆசிரியர்கள் தங்கள் கருத்தை பகிர கேட்டுக்கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக