முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 20 நவம்பர், 2014

பகுதிநேர பயிற்றுநர்களின் ஊதியம் ரூ. 7000 ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது

தமிழகத்தில் அரசாணை எண் 177. நாள் 11.11.2011 ன் படி, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட, பகுதிநேர பயிற்றுநர்களின் ஊதியம் ரூ. 5000 த்திலிருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணைஎண் 186. நாள் 18.11.2014 முதன்மைச் செயலர் அவர்களால் வெளியிடப்பட்டது.

இவ்வாணையில் ஒரு பகுதிநேர பயிற்றுநர், காலிப்பணியிடம் ஏற்படுமாயின் இரு பள்ளிகளில் பணியாற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அறிக்கையில் 1300 பகுதிநேர பயிற்றுநர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. அது நிற்க ! 

தற்பொழுது சுமார் 2000 பகுதிநேர பயிற்றுநர் பணியிடங்கள், குறைந்த ஊதியம் மற்றும் பணிவரன்முறை செய்யாமை போன்ற காரணங்களால் காலியானதாக பத்திரிக்கைச் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.

ஆகையால் பணியாற்றிவரும் பகுதிநேர பயிற்றுநர்களில் சுமார் 2000 பேருக்கு இரு பள்ளிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அரசாணைகளை நமது அரசாணைப்பகுதியில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக