கடந்த 2012 ஆம் ஆண்டு அரசு பள்ளி களில் ஏறத்தாழ 16 ஆயிரம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி) வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நியமிக்கப்பட்டனர்.
அவர்கள் வாரத்துக்கு 3 நாட்கள் 3 மணி நேரம் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகுப்பூதியம் ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் அண்மையில் அறிவித் திருந்தது. ஆனால், இதுவரை தொகுப்பூதியம் உயர்த்தப்படாமல் உள்ளது.
இந்நிலையில், அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்கள் சுமார் 100 பேர் நேற்று இரவு 7 மணியளவில் தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்தனர்.
ஏற்கெனவே அறிவிக் கப்பட்டபடி தொகுப்பூதியத்தை ரூ.7 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று தேவையான நடவடிக்கை எடுப்பதாக ஆசிரியர்களிடம் அமைச்சர் வீரமணி உறுதியளித்தார்.
- கல்விக்குயிலின் கூவலில் இருந்து நேரடியாகப் படிக்க ...
- கல்விக்குயிலின் கூவலில் இருந்து நேரடியாகப் படிக்க ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக