பணியில் சேர்ந்து மூன்று ஆண்டுகளாகியும் சேரும்போது எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலையிலேயே இன்னும் இருக்கிறோம். எத்தனையோ கண்டனப் போராட்டங்கள்; எத்தனையோ ஆதரவுகள்; எத்தனையோ ஊர்வலங்கள்; கால மாற்றமோ காற்றினும் கடுகி விரைகின்றது. ஆனால் விடையென்னவோ சூனியம்தான் !...
பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் படைப்பாளிகள். படைப்பாளிகளுக்கே உரிய கர்வம், வர்க்க பேதமின்றி இருக்கத்தான் செய்யும். குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன் பார்த்தாலும்கூட ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அடிப்படைத் தேவைகளையாவது பூர்த்திசெய்ய வேண்டியது அரசின் கடமை. படைப்பாளிகளுக்கு கொடையில்லை என்றாலும் பரவாயில்லை. பாடை கட்டி படையல் போட்டு விடுவார்களோ ?. நாட்டின் கடைநிலை ஊழியனின் ஊதியத்தை விட மிகக் குறைந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட தடைபோடுவது எவ்விதத்தில் நியாயம் ?
மேலும், மத்திய அரசினால் வழங்கப்பட்ட ஊதிய உயர்வினையும் அமல்படுத்தாதது ஏன் ?
சுற்றமும், நட்பும் தித்திக்கும் தீபாவளி கொண்டாட, நாங்கள் கறுப்பு தீபாவளிகளில் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். அரசினர், தனியார், வணிகர், நாள்கூலி என அனைவருக்கும் சம்பளம், போனஸ் என கிடைக்கிறது. இவை அனைத்தினின்றும் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். இந்த அரசினால் நியமனம் செய்யப்பட்ட எங்களை மட்டும் இந்த அரசு கண்டு கொள்ளாதது ஏன்?
இத்தனைக்கும் நாங்கள் ஆசிரியர் என்ற நிலைக்கும் கீழிறங்கி ஆளும்கட்சி அரசியலுக்கு தலைவணங்கினோம்.
இப்பொழுது ?... இறுதி முயற்சி...
இனிமேல் ? ...மூன்று நாட்கள் காத்திருக்கவும்....
பொன். சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக