முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 27 அக்டோபர், 2014

அரசாணையில்லா அறிவிப்பால் தவிப்பு; கலையாசிரியர்கள் காத்திருப்பு - கலையாசிரியர் ராஜகுமார்

கோவை : பகுதிநேர கலையாசிரியர்களின் அடிப்படை சம்பளத்தை, 2,000 ரூபாய் உயர்த்தி தருவதாக வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு, அரசாணை வெளியாகாததால், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும், 15 ஆயிரத்து 548 பகுதிநேர கலையாசிரியர்கள், இசை, ஓவியம், தையல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை நடத்த, 2012ல் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு, அடிப்படை சம்பளமாக, 5,000 ரூபாய் வரை நிர்ணயித்து, வாரத்துக்கு மூன்று நாட்கள் வீதம், பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், பகுதிநேர கலையாசிரியர்களின் நலனுக்காக, அடிப்படை ஊதியத்தில் இருந்து, ௨,000 ரூபாய் உயர்த்தி தருவதாகவும், மார்ச் மாதத்தில் இருந்து, நிலுவைத்தொகை கணக்கிடப்பட்டு தருவதாகவும், கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அறிவிப்பு வெளியாகி, மூன்று மாதங்களாகியும், ஊக்கத்தொகையுடன் கூடிய சம்பளம் வழங்கப்படவில்லை.

தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''அறிவிப்பு வெளியாகி, மூன்று மாதங்களாகியும், அரசாணை இல்லாததால், ஊக்கத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு கூட, போனஸ் உள்ளிட்ட எவ்வித பணி சலுகையும் இல்லை'' என்றார்.

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டந்தோறும், அரசு பள்ளிகளில் பணி புரியும், பகுதிநேர கலையாசிரியர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள், பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் முறையான அறிவிப்பு வந்தால், ஊக்கத்தொகை அளிக்கப்படும்' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக