முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 29 அக்டோபர், 2014

TET ஆசிரியர் தேர்வு 3000 பணியிடங்களுடன் புதிய பட்டியல் நவம்பரில் வருகிறது ?

3000 TET ஆசிரியர் இடங்களுக்குள் நவம்பர் மாதம் புதிய பட்டியல் வெளியாக உள்ளது இவை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களை மட்டும் கொண்டு நிரப்படுவதாக தகவல்கள் கூறுகிறது. இருப்பினும் 5% மதிப்பெண் தளர்வு மேல்முறையீடு பற்றி அரசு முடிவை பொறுத்து இந்த பட்டியலில் 5% மதிப்பெண் தளர்வு உண்டா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே நமது வலைதளத்தில் கூறிய படி 2000 க்கு மேற்பட்ட பணியிடங்கள் மற்றும் தற்போது முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பணியிடங்களையும் சேர்ந்து 2500-3000 பணியிடங்கள் அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என தகவல்கள் வந்துள்ளது.

இவை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தான் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் எதுவும் வந்தாலும் வரலாம் ஆனால் அவற்றைப்பற்றி தெரியவில்லை. இந்த தகவல் உறுதியான தகவல் என்று தெரியவருகிறது. இந்த பணியிடம் இருப்பது உண்மை ஆனால் அரசு அளிக்கும் அனுமதி தான் முக்கியம் இவற்றை நவம்பர் வெளியாகிறாதா இல்லை இந்த பணியிடங்களும் மறைக்கப்படுமா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் ஆனால் நவம்பரில் வெளியாகிறது என உறுதியாக கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக