முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 29 அக்டோபர், 2014

பட்டதாரி ஆசிரியர்களைப் போல தேர்வுநிலை தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரே பதவியில் பணியாற்றி வந்தால் அவர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டு அடுத்த நிலை பதவிக்குரிய சம்பளம் வழங்கப்படும். ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் பதவி, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இணையானதாக கருதப் பட்டு அதே ஊதிய விகிதம் (அடிப்படைச் சம்பளம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,600) நிர்ணயிக்கப்பட்டது.

பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுநிலை அந்தஸ்து பெறும்போது அவர்களின் தர ஊதியம் ரூ.4600-லிருந்து ரூ.4,800 ஆக உயர்த்தி ஊதியம் திருத்தி யமைக்கப்படுகிறது.

4,800 வழங்க உத்தரவு

இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர்களைப் போன்று தேர்வுநிலை அந்தஸ்து பெறும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் தர ஊதியத்தையும் ரூ.4600-லிருந்து ரூ.4,800 ஆக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தமிழக அரசின் நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக