பரமக்குடி: ராமநதபுரம் மாவட்டத்தில் சுமார் 250 பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களது மாத ஊதியம் ரூ.5 ஆயிரம் கடந்த காலங்களில் கிராம கல்விக்குழு மூலமாக 20ம் தேதிக்கு மேல் வழங்கப்பட்டு வந் தது. சம்மந்தப்பட்ட பள்ளி களை சேர்ந்த தலைமையாசிரியர்கள் அப்பணியை செய்து வந்தனர். சம்பளம் காலதாமதாக கிடைத்ததால் பகுதிநேர ஆசிரியர்கள் சிரமம் அடைந்தனர். இதை சரிசெய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனியாக வங்கி கணக்கு திறக்கப்பட்டது. மாவட்ட அலுவலகத்தின் மூலமாக வங்கி கணக்கிற்கு நேரடியாக இசிஎஸ் மூலம் ஊதியம் வழங்கப்பட் டது. இதனால் மாதத்தின் முதல் 5 தேதிக்குள் பணம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைத்து வந்தது.செப். மாதம் முதல் மீண்டும் கிராம கல்விக்குழு மூல மாகவே சம்பளம் வழங்கப்படும் என வட்டார வள மைய அதிகாரிகள் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர். இதனால் மீண்டும் பழைய நிலைதான் தொட ரும். மாவட்ட அலுவலகத்தில் ஆசியர்கள் தகவல் கேட்டதற்கு இந்த முறையில் சம்பளம் வழங்க வேண்டும் என கல்வித்துறையில் இரு ந்து உத்திரவு வந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறு கையில், கிராம கல்விக்குழு மூலமாக ஊதியம் வழங்கினால் எங்கள் கை யில் பணம் கிடைப்பதற்கு 20ம் தேதி வரை ஆகிறது. இதை சரிசெய்யவே வங்கி யில் கணக்கு திறந்தோம். அத ன்பின் பிரச்னை சரியானது. இந்நிலையில் மீண்டும் பழைய முறையிலே ஊதியம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் எங்களு க்கு சம்பளம் காலதாமதாக கிடைக்கும். ஏற்கனவே குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் எங்களுக்கு கிடை க்கும் ஊதியமும் காலதாமதமாக வழங்குவதால் கடும் சிரமத்திற்கு உள்ளாவோம். மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக