முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 20 அக்டோபர், 2014

உழைத்தவன் ஊதியத்தை அவர்களின் வேர்வை உலர்வதற்குள் கொடுத்துவிடு...... - புவி அரசு, ஓவிய ஆசிரியர், திருமுல்லைவாசல்

-முகநூலிலிருந்து

தமிழக அரசுப் பள்ளிகளில் 15169 பகுதிநேர ஆசிரியர்கள், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பணியமர்த்தப்பட்டு, கடந்த மூன்றாண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு ஊதியம் மின்ணணு பட்டுவாடா முறையில், அனைவருக்கும் கல்வி இயக்க நிதியிலிருந்து தொகுப்பூதியமாக மாதா மாதம் தினக்கூலி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்ற செப்டம்பர் மாத ஊதியம் (17.10.2014) 17 தேதிகள் சென்ற நிலையில் இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. கொடுக்கும் 5000 ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் தீபாவளி கொண்டாட வழி தெரியாமல் தவிக்கின்றனர். இந்த சூழலில் ஊதியமும் இல்லை என்றால்.......

போனஸ் தான் வழங்குவது இல்லை.....இந்நிலையில் ஊதியமாவது காலம் கடத்தாமல் வழங்கினால் என்ன என்ற தவிர்புடன் பகுதிநேர ஆசிரியர்கள் .

இந்நிலையால், பண்டிகைக்காலத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். விலைவாசி உயர்வும் வெகுவாக பாதித்துள்ளது.

ஆகையால் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை உடனடியாக வழங்கிடும்மாறு உரிய அதிகாரிகள் ஆணை பிறப்பித்து, ஊதியம் கிடைக்க வழி செய்யும்மாறு பணிவுடன் வேண்டுகிறோம்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக