முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 17 அக்டோபர், 2014

பணி நியமன ஆணை பெற்றும்பணியில் சேராத ஆசிரியர்களின் பணிநியமனத்தை ரத்து செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாகதமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர்,அனைத்துமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ளசுற்றறிக்கையில் (ந.க.எண்: 025400, நாள் 15-10-14) கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தொடக்க கல்வித் துறைக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம்பணியிட ஒதுக்கீடும், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களால்பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பணி நியமன ஆணை பெற்ற பல இடைநிலை ஆசிரியர்களும்,பட்டதாரி ஆசிரியர்களும் இதுவரை பணியில் சேரவில்லை. அப்படி பணியில்சேராதவர்களுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் காரணம் கேட்டுஅறிவிக்கை அனுப்ப வேண்டும்.

அதன்பின்பும் 27-10-14-க்குள் பணியில் சேராவிட்டால் அவர்களின் பணி நியமனஆணையை ரத்து செய்ய வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக