முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 13 அக்டோபர், 2014

3 ஆயிரம் வி.ஏ.ஓ., காலி பணியிடம் : மாநில பொதுச்செயலாளர் தகவல்

''தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ., காலி பணியிடங்கள் உள்ளது,'' என கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன் கூறினார். 

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: கடந்த 1982 முதல் 31 ஆண்டுகளாக வி.ஏ.ஓ., க்களாக பணியாற்றிய 400 பேருக்கு சிறப்பு ஆர்.ஐ., துணை தாசில்தார், தாசில்தார் என பதவி உயர்வு அளிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 12 ஆயிரத்து 613 வி.ஏ.ஓ., பணியிடங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. ஓய்வின் அடிப்படையில் காலி பணியிடங்கள் மேலும் அதிகரித்து வருகிறது. 4 ஆண்டு பணி மூப்பு உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வு ஒதுக்கீட்டை 60 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் அனைத்து வி.ஏ.ஓ., க்களுக்கும் ஒரே மாதிரியான பதவி அதிகாரம் வழங்க வேண்டும். பட்டா மாறுதல் உத்தரவு விதிமீறல் அதிகாரத்தை முறைப் படுத்த வேண்டும். ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். பங்களிப்புடன் கூடிய புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு வழங்குவது போல், கூடுதல் பணிக்கேற்ப சம்பளம் வழங்க வேண்டும். இதர துறை ஊழியர்களுக்கு வழங்கியது போல் தேர்தல் பணி சிறப்பு ஊதியம் வி.ஏ.ஓ.,க்களுக்கும் வழங்க வேண்டும். சங்க பிரதிநிதிகளுடன் அரசு கூட்டு கலந்தாய்வு நடத்தி, பிரச்னைகளை களைய வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக