முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 1 செப்டம்பர், 2014

அ.க.இ. திட்டஅறிக்கையில் - பகுதிநேர ஆசிரியர்களின் ஊதிய உயர்வு அறிவிப்பு

SSA சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் அகஇ - 2014-15ம் ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
  • 2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.
  • 2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 88 உயர்தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது.
  • 2014-15ம் புதியதாக துவக்கப்படவுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு 452 பணியிடங்களும், உயர்தொடக்கப்பள்ளிகளுக்கு 264பணியிடங்களும் கோரியுள்ளது.
  • பகுதி நேர ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ .5000/- ல் இருந்து ரூ.7000/-ஆக உயர்த்த கோரியுள்ளது. அதேபோல் இன்னும் நிரப்பப்பட வேண்டிய 1380 காலிப்பணியிடங்களும் நிரப்ப உள்ளது.
  • 2014-15ம் ஆண்டில் கீழ்காணும் அட்டவணையின் படி ஆசிரியர்களுக்குபணியிடை பயிற்சி வழங்க உத்தேசித்துள்ளது.
  • · தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார மைய அளவில் 13 நாட்கள் குறுவள மைய அளவில் 7 நாட்கள் உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார மைய அளவில் 11 நாட்கள் குறுவள மைய அளவில் 7 நாட்கள் தலைமையாசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.மேலும் புதியதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பணியிடை பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு ....SSA திட்ட அறிக்கை 2014 - 15


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக