முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 3 செப்டம்பர், 2014

குரு உத்சவ்' என்பது கட்டுரைப் போட்டி: மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விளக்கம்

ஆசிரியர் தினம் என்பதை இனி 'குரு உத்சவ்' என்றுதான் அழைக்கவேண்டும் மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளதற்கு தமிழகஅரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 'குருஉத்சவ்' என்பது

கட்டுரைப் போட்டிக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு மட்டுமே எனமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிவிளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது: 'குரு உத்சவ்' ஆசிரியர்களைக் கொண்டாடும்வகையில் நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள கட்டுரைப்போட்டிக்கான தலைப்பு. இதற்குக் கூட அரசியல் கட்சிகள் எதிர்ப்புதெரிவிக்கின்றன என்றால் எனக்கு அது வேதனை அளிக்கிறது.அதேபோல், ஆசிரியர் தினத்தன்று பிரதமர் மோடிதொலைக்காட்சியில் ஆற்றும் உரையை பள்ளி மாணவர்கள்கட்டாயம் பள்ளியில் இருந்து காண வேண்டும் என எந்த ஒருஉத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தேவையில்லாமல் அரசியல்கட்சிகள் திரித்துக் கூறுகின்றன என்றார்.

ஆசிரியர் தினத்தை 'குருஉத்சவ்' என்று பெயர்மாற்றம் செய்யும்உத்தரவு தேசிய ஒருமைப்பாடுக்கு எதிரானது என வைகோவும், 'ஆசிரியர் நாள்' என்ற பெயரை 'குரு உத்சவ்' என மத்திய அரசுமாற்றியிருப்பது சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிக்கும்நடவடிக்கை என பாமக நிறுவனர் ராமதாசும் கூறியுள்ளனர். மதிமுக,பாமக கட்சிகள் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் அங்கம்வகிக்கின்றன.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக் கிழமை), திமுக தலைவர் கருணாநிதி விடுத்திருந்த அறிக்கையில்: ஆசிரியர் தினம் என்பதைஇனி 'குரு உத்சவ்' என்றுதான் அழைக்க வேண்டும் மத்திய அரசுவெளியிட்டுள்ள ஆணை, நம் மொழியை வீழ்த்த பின்னப்பட்ட சூழ்ச்சிஎன கூறியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக