நாகை மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க கூட்டமைப்பின் கூட்டம், 14.09.14 ஞாயிற்றுக்கிழமை, நாகப்பட்டினம் நீதி மன்ற வளாகத்தில் உள்ள ஓய்வூதியதார் சங்க கட்டிடத்தில் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் திரு. பாலமுரளி அவர்கள் முன்னிலை வகித்தார். மண்டலத் தலைவர் திரு. ஜான்சன் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் திரு. காளிதாஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திருவாளர்கள் மாரியப்பன், பாலாஜி, ஜெயப்பிரகாஷ், மணிகண்டன், மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளர் திரு. ஸ்டாலின் மற்றும் பலர் கலந்துக் கொண்டு ஊதிய உயர்வு மற்றும் ஏப்ரல் 2014 முதல் வழங்கப்பட உள்ள ஊதிய உயர்வு நிலுவைத் தொகை குறித்து விவாதித்தனர்.
மேலும் திரு ஜான்சன் அவர்களின் தொலைப்பேசி வழியாக பேசிய மாநில பொறுப்பாளர்கள் தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கினர். விரைவில் நாம் பணிநிரந்தம் செய்யப்பட உள்ளதாகவும், அதற்காக முதல்வர் மற்றும் நிதியமைச்சர், கல்வியமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்து வருவதாகவும்தெரிவித்தனர்.
இந்த ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி இயக்க பட்ஜெட்டில் குறிப்பிட்ட ஊதிய உயர்வு உரிய நேரத்தில் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.
முடிவில் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதிக்குள் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட உள்ளதாகவும், நிலுவைத் தொகையும் விரைவில் கிடைக்க ஆணை வெளியிடப்பட உள்ளதாக பத்திரைக்கைச் செய்திகள் தெரிவிப்பதாகவும் அறியப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக