தற்போது TET- தேர்வில் இட ஒதுக்கீட்டில் 5% மதிப்பெண் தளர்வுஅளித்து பணிநியமனம் வழங்கப்படிருக்கிறது. இந்த நிலையில்மதுரை உயர்நீதிமன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வு அளித்தது தவறுஎன்று அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால்இந்த 5% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்டிருக்கும்ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டாம் என்றும் இனிவரும்காலங்களில்
இந்த 5% மதிப்பெண் வழங்கக்கூடாது என்றும் 5% மதிப்பெண்தளர்வுக்கான அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்றுஉத்தரவிட்டுள்ளது.ஆனால் 652 கணினி ஆசிரியர்கள் விஷயத்தில்TRB நடத்திய தேர்வில் 50% மதிப்பெண் எடுத்தால் அவர்களுக்குபணிவழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. தேர்வு நடந்து முடிந்தபின்பு அரசு 50% இலக்கை மாற்றி 15% தளர்வு கொடுத்து 35%எடுத்தால் போதுமானது என்று கருதி அரசு தெரிவித்தது.இதனடிப்படையில் TRB தேர்வு முடிவை வெளியிட்டது. இதைஎதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தன் தீர்ப்பைவெளியிட்டது.
தீர்ப்பில் 35% சதவீதமாக அரசு குறைத்தது தவறு. இதனால் 35%மேலும் 50% குறைவாகவும் மதிப்பெண் எடுத்தவர்கள் பணிநீக்கம்செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது. இதனால் 652 கணினி ஆசிரியர்கள் பணிநீக்கம்செய்யப்பட்டனர்.
TET-ல் 5% தளர்வு அளித்தது தவறு என்றும், கணினிஆசிரியர்களுக்கான தேர்வில் 50% என்று உள்ளதை 15% தளர்வு 35%ஆக குறைத்தது அளித்தது தவறு என்று நீதிமன்றம் கூறியுள்ளது.ஆனால் இந்த முறை மட்டும் 5% தளர்வால் தேர்வானவர்களைபணியிலிருந்து நீக்க வேண்டாம் என்று கூறியுள்ளது. கணினிஆசிரியர்கள் தேர்வு விஷயத்தில் 50% என்று உள்ளதை 15% தளர்வுஅளித்து 35% மதிப்பெண் பெற்று தேர்வானவர்களை பணியிலிருந்துநீக்க வேண்டாம் என்று நீதிமன்றம் கூறவில்லை,
மாறாக 50%-திற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் 35%மேல் மதிப்பெண் பெற்றவர்கள் பணியிலிருந்து நீக்கம் செய்யவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
TET-ல் 5% மதிப்பெண் குறைவால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குஒரு நியாயம், இதே TRB நடத்திய வேதர்வில் 15% மதிப்பெண்தளர்வால் தேர்வு செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களுக்கு ஒருநியாயம். நீதி எங்கே இருக்கின்றது.
தமிழக அரசும் பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களுக்காக குரல்கொடுக்கவில்லை.
TET-ல் 5% மதிப்பெண் குறைவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்றுதான்(26.09.14) பணியில் சேர உள்ளனர். ஆனால் கணினி ஆசிரியர்கள்தேர்வில் 15% மதிப்பெண் தளர்வால் தேர்வு செய்யப்பட்ட கணினிஆசிரியர்கள் பணியில் சேர்ந்து 4 ஆண்டுகள் 6 மாதங்கள் முறையானஊதியத்தில் பணிபுரிந்துள்ளனர். இந்நிலையில் இவர்களை (652கணினி ஆசிரியர்களை) பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக