முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 8 செப்டம்பர், 2014

50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

தா.பேட்டை,: 50% அகவிலைப்படியை அடிப்படைஊதியத்துடன் இணைக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது முசிறி ஊராட்சிஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட கிளை பொறுப் பாளர் மருதபாண்டியன் தலைமை வகித்தார்.மாவ ட்ட செயலாளர் மோகன் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார். 50சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்திட வேண்டும்.புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளைகளைய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான வீட்டு வாடகைப்படி,கல்விப்படி வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊராட்சி உதவியாளர்,வருவாய் கிராம உதவியாளர், ஊர்புற நூலகர் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்டகாலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக முதல்வர் சங்க நிர்வாகிகளைஅழைத்து கோரிக்கைகள் குறித்து பேச வேண் டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள்தெரிவித்தனர். பொது சுகாதார துறை, ஊரக வளர்ச்சி துறை, பட்டு வளர்ச்சி துறை,வருவாய் துறை, கூட்டுறவு துறை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.பொருளாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக