மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா அவர்களுக்கு,
- 10 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ( ரூ. 1500 முதல் 2000 சம்பளத்தில்) 5 ஆண்டுகள் நிரந்தரப் பணியில் பணிபுரிந்தோம்.
- நாங்கள் வேலையில் சேரும் போது வயது 25 பணியிலிருந்து நீக்கப்பட்ட நாளில் எங்கள் வயது 42.
- இளமையின் உழைப்பினை உறிந்து கொண்டார்கள்.
- (40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 25 வயதுக்குரிய உழைப்பினை செய்யமுடியும் என்றால் நாங்கள் முறையிட மாட்டோம் அம்மா).
- இரு முறை தேர்வு
தேர்விற்கு முதல் நாள் வரை,
மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு வகுப்பறையில் பணியாற்றினோம்.
பள்ளியில் அக்கறை கொண்டு செய்த வேலைகள் .
கல்வித்துறை மீது மதிப்பு கொண்டு செய்த வேலைகள்.
நாங்கள் பணியில் இருந்த நாளில் ஒரு மாணவர் கூட தோல்வி பெறவில்லை இதை எங்களால் நிரூபிக்கமுடியும் அம்மா.
முதல் தேர்வில் 35 சதவீதம் போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்தான் எங்களை நிரந்தர பணியில் அமர செய்தது. நாங்கள் கேட்கவில்லை 35 சதவீதம் போதும் என்று.
இரண்டாவது தேர்வில் 27 வினாக்கள் தவறு என்று நீதிமன்றம் வாயிலாக நிரூபனம்.
தவறான கேள்விக்கு மதிப்பெண் போடாமல் கழித்து மதிப்பீடு செய்தார்கள். ஆசிரியர் தேர்வு வாரியம். செய்த தவறை மறைக்க.
(முழு நேரமும் வெளியில் இருந்து படித்து்விட்டு தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (ஆசிரியர் தேர்வு வாரியம்) தவறான வினாக்களுக்கு ஓடிச்சென்று மதிப்பெண் வழங்குதல்)
இந்த தவறான கேள்வியால் 4 கணினி ஆசிரியர்கள் இறந்து விட்டார்கள். பல பேர் தற்கொலைக்கு முயல காத்து கொண்டீர்ருக்கார்கள். அரசு சொல்லும் பதிலை பொருத்து.
சமீபத்தில் குளறுபடி செய்தவர்கள் என்று உச்சநீதிமன்றமே நீதி வழங்கிய போதும் தானாக முன்வந்து மேல்முறையீடு செய்து மேல்முறையீட்டின் வாதங்களில்
10 ஆண்டுகளாக பணியில் இருந்தவர்களுக்கு நீதிபதிகளின் தீர்ப்பு வழங்கிய விதம் நகைப்புள்ளானது என்ற வாதம்
40 வயதினை தொட்டவர்கள் என்ற வாதம்.
அம்மா எங்கள் அணைவருக்கும் 42 வயதிற்கு மேல் ஆகிவிட்டது தாயே எங்களை காப்பாற்றுங்கள்.
மாண்புமிகு அம்மா எங்களை காப்பாற்றுங்கள் அம்மா , எங்கள் குடும்பமே இனி உங்கள் கையில்தான் அம்மா இருக்கிறது. தாயே காப்பாற்றுங்கள்.
- மேல்நிலைப் பள்ளி பணிநீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக