கோபிசெட்டிபாளையம்: தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில், அவசர ஆலோசனை கூட்டம், கோபியில் நடந்தது. கமலக்கண்ணன் வரவேற்றார். தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சிவகாமி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் இளமதி பேசியதாவது:
கடந்த, 2011-12ம் கல்வியாண்டு முதல், பகுதி நேர ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற நாங்கள், 5,000 ரூபாய் மாத சம்பளத்தில், கடந்த, நான்கு ஆண்டுகளாக பணிபுரிகிறோம். எங்களுக்கு, இதுவரையில் எவ்வித சம்பள உயர்வோ, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல், எவ்வித சலுகைகளோ வழங்கப்படுவதில்லை. இதுசம்பந்தமாக அரசுக்கு, பலமுறை நாங்கள் கோரிக்கை வைத்தும், எந்த பயனும் இல்லை. குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் நாங்கள் அனைவரும், ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில், எங்களை முழுநேர ஊழியராக மாற்றி, காலவரை முறை ஊதியம் வழங்கிட வேண்டும், என்றனர். மாவட்ட பொருப்பாளர்கள் தமிழரசு, சீதாராமன், உதயக்குமார், ரகுபதி, முரளி, அகிலாண்டம், சிவசக்தி, விசாலாட்சி ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட பொருப்பாளர் தேவராஜ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக