முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

கடந்த ஆண்டில், பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்களில் 4 பேர் இறப்பு, சிலர் தற்கொலைக்கு முயன்றனர் - tnkalvi

1998 முதல் 14 வருடங்கள் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியராக பணி யாற்றி இப்போது 40 வயதை கடந்த நிலையில் சென்ற வருடம் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பணியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு வருடத்தில் 4 பேர் இறந்து உள்ளனர். பலபேர் தற்கொலைக்கு முயன்று அவர்களது குடும்பத்தினரால் காப்பாற்ற பட்டுள்ளனர். இவர்களது குடும்பம் சமுதாயத்தில் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பிள்ளை , மனைவி என்று அவர்களை சார்ந்தவர்கள் அணைவரும் மிகவும் கஷ்டத்தில் உள்ளார்கள். பெண்கள் விவாகரத்துக்கு ஆளாகியும், பல ஆண்கள் , குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்கிறார்கள். பல பெண்கள் கணவனால் துண்புறுத்தப்பட்டும் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர் கூறியதாவது :-

முதல் தேர்வு :-

      1998 முதல் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியராக மாதம் 1500 சம்பளத்தில் பணியாற்றி வந்தனர். 2007 ல் இவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு அதில் 35 சதவீதம் எடுத்தவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. நாங்கள் கேட்கவில்லை 35 சதவீதம் போதும் என்று. அவர்களே முடிவு செய்து 35 எடுத்தவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு நியமனம் செய்தார்கள். இதில் எங்கள் மீது என்ன தவறு இருக்கிறது.

இரண்டாம் தேர்வு :-

      பின்னர் 50 சதவீதத்திற்கு கீழே உள்ளவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் 42 கேள்விகள் தவறு என்று எங்களால் முறையிடப்பட்டது. பின்னர் அதை மெட்ராஸ் ஐஐடி கல்வி வல்லுனர் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதை ஆராய்ந்து 20 கேள்விகள் முற்றிலும் தவறு என்றும் 7 கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்றும் அறிக்கை சமர்பித்தார்கள். இதை பெற்றுக் கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மொத்த மதிப்பெண் 150 லிருந்து 20 மதிப்பெண்ணை கழித்து 130 திருத்தி முடிவை வெளியிட்டனர். படித்தவர்கள் நிறைந்த தமிழகத்தில் 7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறியும் எங்கள் சென்ற வருடம் ஜூலை-24 ம் தேதி வேலையில் இருந்து தூக்கிவிட்டனர்.
இதில் எங்கள் மீது என்ன தவறு இருக்கிறது.                            

தேர்வில் தவறான கேள்விகளை கழிப்பது எந்த விதத்தில் நியாயம்;

நடந்து முடிந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வில் 21 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தவறான 6 கேள்விகளுக்கு மதிபெபெண் கொடுக்கப்பட்டது. நடந்து முடிந்து 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் கூட 6 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இவர்களாவது புதியவர்கள் ஆனால் நாங்கள் 14 வருடம் எங்கள்உழைப்பையும், எங்கள் இளமையும் அரசிற்கு அர்பணித்தவர்கள். எங்களுக்கு கழித்து விட்டார்கள். எங்களுக்கும் அணைத்து அரசு ஊழியர்கள் போல் CPS, SPF, SPF 2000, FPF, Health insurance  பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அரணை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவோ, போராட்டம் செய்யவோ மாட்டோம் அதற்கு மனமும் இல்லை, பணமும் இல்லை. சமீபத்தில் கன்னியாகுமரியில் ஒரு ஆசிரியை தூக்கில் தொங்கி குடும்பத்தினரால் காப்பாற்ற பட்டுள்ளார். மதுரையில் ஒரு ஆசிரியையின் பையன் தற்கொலை செய்துள்ளார். தங்களை அம்மா டாக்டர் படிக்க வைக்க மாட்டார் என்று இரவில் தற்கொலை செய்து கொண்டார். நாங்கள் அணைவரும் 40 வயது முதல் 50 வயதிற்குள்ளானவர்கள். எங்களை வேலையில் இருந்து தூக்கி எங்களையும் , எங்கள் குடும்பத்தி னரையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டார்கள்.

இப்படிக்கு - பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக