முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 9 ஆகஸ்ட், 2014

முதலமைச்சர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் அவதூறு கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டங்கள் நடத்தினர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் அவதூறு கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் நேற்று ( 08.08.2014 ) போராட்டங்கள் நடத்தினர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில், அவதூறு கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலை அருகே, சிறப்பாசிரியர்களாக பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் சுமார் 200 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அமைப்பாளர் திரு. ஏசுராஜா தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

பெரம்பலூர் பாலக்கரை பகுதியிலும் சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் ராஜபக்சே நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இலங்கை அதிபரின் உருவபொம்மை கிழித்தெறியப்பட்டு போராட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பு, அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். இலங்கை அரசுக்கு எதிராக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

தேனியில், பாரத ஸ்டேட் பாங்க் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டு, இலங்கை அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பகுதி நேர ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக