முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

ஊதிய உயர்விற்கு பகுதிநேர ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்

கோவை : அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, 2000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில், நன்றி தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும், 2012 மார்ச்சில், 16 ஆயிரத்து 549 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இசை, ஓவியம், தையல், கம்ப்யூட்டர், உடற்கல்வி, தோட்டக்கலை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு, மாதம் 5,000 ரூபாய் சம்பளத்தில், பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டது.ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் என, வாரம் மூன்று நாட்கள் ஒன்பது மணி நேரம், மாதம் 32 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என, பணி நியமனத்தில் தெரிவிக்கப்பட்டது.பகுதி நேரம் என்றாலும், அரசு நியமனம் என்பதால், தனியார் பள்ளிகளில் நல்ல சம்பளத்தில் பணியில் இருந்தும், அதை ராஜினாமா செய்து விட்டு, இப்பணியில் சேர்ந்தனர். சம்பளம் மிக குறைவாக இருப்பதாகவும், இதை உயர்த்தி வழங்கவும், முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனவும், கோரிக்கை விடுத்தனர்.

இவர்களுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் முதல், 2,000 ரூபாய் ஊதிய உயர்வை நிர்ணயித்து, 7,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான, அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க செயலர் ராஜாதேவகாந்த் கூறுகையில், ''பகுதி நேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசு ஊதிய உயர்வை அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதேபோல், எங்களது மற்ற கோரிக்கைகளுக்கும், விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக