முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 20 ஆகஸ்ட், 2014

பகுதிநேர பணியிட ஆசிரியர்களை, அதே ஊதியம் மற்றும் பதவியிலேயே, முழுநேர பணிக்கு வற்புறுத்தல் - ஆசிரியர்கள் புலம்பல்.

திருப்பூரில் உள்ள சில பள்ளிகளில், முழுநேரம் பணியாற்ற வற்புறுத்துவதாக, பகுதி நேர ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளிகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறையை போக்கும் வகையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், தமிழகம் முழுவதும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 

ஓவியம், இசை, தையற்கல்வி மற்றும் உடற்கல்வி சார்ந்த பாடங்களை, சிறப்பு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம், மாதம் 12 நாட்கள்அவர்கள், கட்டாயம் பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில்,அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக 543 பேர் பணியாற்றுகின்றனர். 

சில பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. சில பள்ளிகளில் மருத்துவ காரணங்களுக்காக நீண்ட விடுப்பில், ஆசிரியர்கள் சென்றுவிடுவதால், மாதக்கணக்கில், அப்பணியிடம் காலியாக உள்ளது. பள்ளியில் கூடுதல் ஆசிரியர் இருக்கும்பட்சத்தில், அங்கு மாற்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி, "சிலபஸ்' முடிக்கின்றனர். 

போதிய ஆசிரியர் இல்லாத பட்சத்தில், பாடம் கற்பிப்பது தடைபடுகிறது.அவ்வாறான சில பள்ளிகளில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை, வகுப்பறையில் பாடம் நடத்துமாறு, தலைமை ஆசிரியர்கள் வற்புறுத்துகின்றனர். ஓரிரு ஆசிரியர்கள் ஆர்வமுடன் பாடம் நடத்த முன்வந்தாலும், பகுதிநேர ஆசிரியர்களில் பலரும், அதை விரும்புவதில்லை. 

விருப்பமில்லாத ஆசிரியர்களை, பாடம் நடத்துமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாக, புகார் எழுந்துள்ளது.உடற்கல்வி, தையல், ஓவியம், இசை போன்றவற்றில் மட்டுமே, பகுதிநேர ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளது; அவர்கள் வகுப்பறையில் தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம் சார்ந்த பாடங்களை நடத்துவதற்கு போதிய பயிற்சியோ, அனுபவமோ இல்லை. 

மாணவர்களுக்கு புரியும் விதமாக, அவர்களால் எளிதாக பாடம் கற்பிப்பதும் கடினம். பகுதிநேர பணிக்கு வரும் தங்களை, முழுநேர பணிசெய்ய வற்புறுத்துவதாக, சிறப்பு ஆசிரியர்கள் பலரும் புலம்புகின்றனர்.

www.padasalai.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக