தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஒன்று படுவோம்! வெற்றிப் பெறுவோம்!
நன்றி !!!
கடந்த நான்கு நாட்களாக நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் பொழுது, அரசின் கவனத்திற்கு கோரிக்கைகளை கொண்டுச் செல்ல நமது சங்கத்தின் மாநில நிர்வாகிகளான, மாநில கௌரவத் தலைவர் திரு. சோலை ராஜா, மாநில அமைப்பாளர் திரு சேசுராஜ், மாநிலத் தலைவர் திரு.ஜெயசந்திர பூபதி, மாநிலச் செயலாளர் திரு கோவை D.ராஜாதேவகாந்த், மாநிலப் பொருளாளர் திரு.நாகை ஜான்சன் மற்றும் தேனீ இருளாண்டி, பெரம்பலூர் ஸ்ரீலேகா, மதுரை சிரஞ்சீவி, திருச்சி சுரேஷ் ,வேலூர் குமார், விழுப்புரம் அய்யனார், அரியலூர் இளவரசு, மற்றும் தினேஷ் ஆகியோர் முயன்று, பல சட்டமன்ற உறுபினர்களை சந்தித்து நமது கோரிக்கைகளை தமிழக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் வாயிலாக எடுத்துக் கூறினார்கள்.
அதில் குறிப்பாக, அகில இந்திய பார்வேட்ப்ளாக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.கதிரவன் அய்யா அவர்கள் நமது பொறுப்பாளர்களை கனிவுடன் விசாரித்து, இரவு12 மணி வரை தனது அறையில் அமர வைத்து, சுமார் 2 மணி நேரம் கவனமாக, கோரிக்கைகளைக் கேட்டு, நான் கண்டிப்பாக இது குறித்து சட்ட சபையில் பேசுவேன் என்று உறுதியளித்தார் .
மறு நாள் மாலை 17/07/2014 மாலை 5.30 மணிக்கு சட்ட சபையில் பகுதிநேர சிறப்பு ஆசிரியர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து ,ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என பேசினார்.
அதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் பதிலுரைத்து பரிசீலிப்பதாகவும், அம்மா அவர்களின் மேலான பார்வைக்கு கொண்டு செல்வதாகவும் கூறினார்.
இதற்கு முழு ஆதரவு நல்கி, உற்சாகமாக, ஊக்கம் கொடுத்த, நமது சங்கத்தின் கௌரவத் தலைவரும் ஒலிம்பிக் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவருமாகிய திரு. சோலை M.ராஜா அவர்களுக்கு, நமது சங்கத்தின் சார்பில் மிகுந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
வெற்றி என்பது எட்டிவிடும் தூரத்தில் இல்லை!
அதற்காக அதனை நாம் பிடிக்காமல் விட்டு விடபோவதும் இல்லை!
ஆகவே நம் முயற்சிகள் தொடர வேண்டும்!
நமது ஒற்றுமை ஓங்க வேண்டும்!
ஒன்று படுவோம்! வெற்றிப் பெறுவோம்!
இவண்
மாநிலச் செயலாளர். D.ராஜா தேவகாந்த்,
மாநிலச் செயலாளர். D.ராஜா தேவகாந்த்,
தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக