முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 3 ஜூன், 2014

பகுதிநேரப் பணி .. முழுநேரக் கலக்கம் - கவிதை

பள்ளி திறந்தது... தொடருது அதே நிலை...

பகுதிநேரந்தான் சிறப்பு..
சிறப்பாசிரியர்களுக்கோ வெறுப்பு...

பணிக்கில்லே அங்கீகரிப்பு..

போக்குவரத்துச் செலவு... விலைவாசி ஏற்றம்...
இவைகளின் தாக்கம்... வெயிலினும் வெப்பம்...

பகுதிநேரமா முடியலை ! முழுநேரப் பணிசெய்தாலும்
கணக்கில் வரலே!












பாடத்திட்டம் 9 மற்றும் பத்துக்குமுண்டு
பணி நியமனமோ 6 முதல் 8 வரைக்கு மட்டும்..
உடற்கல்வியைத் தான் சொல்கிறேன்..
உடலில் வியர்க்க வியர்க்க...

கலை ஆசிரியர்கள் முகக்கலை இழந்தனர்...
பார்த்தால் புரியுது
புதிய கலையாசிரியர்கள்
முழு நேரமா.. முழு ஊதியத்தில் நியமனமா?
என்ற ஏக்கத்தில் கலையாசிரியர்கள் 
முகக்கலை இழந்தனர்.

கணினி ஆசிரியர்கள் கண்ணீர் விட்டனர்...
கணினி கல்விக்கு ஒப்பந்தம் உருவானதில்...
ஒப்பந்தப் பள்ளிகளில் முழுநேரமாம் !
அதிக ஊதியமாம்.. அதுவும் தனியார் வாயிலாகவாம்..
அழும் பள்ளிச் செல்லும் குழந்தைளை
பள்ளிக்கு அனுப்பி அழுதனர்..
பகுதிநேர ஆசிரியர்கள்.. முழுநேரமாய்...

'' நாற்பது வயதாகிறது... நான் குடும்பம் நடத்த முடியலே...
முழு நேரமுமில்லே.. முழு ஊதியமுமில்லே..''

என ஏங்கி ஏங்கி அழுதனர்.

அழுகையை நிறுத்த அம்மாவை வேண்டி.. வணங்கி...
சோ.முத்துராமன், பகுதிநேர கணினிப்பயிற்றுநர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக