முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 3 ஜூன், 2014

பகுதிநேர பள்ளி ஆசிரியர்களை முழுநேர பணியமர்த்த கோரிக்கை - தினமலர் நாளிதழ்

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - வேலூர்

பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்த முதல்வர் ஆணையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராதா விடுத்துள்ள அறிக்கை :

தமிழக முதல்வர் ஜெ., இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். பகுதி நேர ஆசிரியர்களாகிய நாங்கள் தேர்தல் பணிகளை செம்மையாக செய்தோம்.

லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பகுதி நேர ஆசிரியர்களை பல தலைமை ஆசிரியர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்து முழுநேரப் பணி செய்ய வலியுறுத்துகின்றனர். மாத சம்பளம் 5 ஆயிரம் ரூபாயை போக்குவரத்துக்கே செலவிடுகிறோம். இதனால் குடும்பங்கள் வறுமையில் வாடிவருகிறது.

முதன்மை பாடங்களை கவனிப்பதற்கு ஏதுவான நிலை ஏற்படும் என்றுதான் சிறப்பு ஆசிரியர்களை அரசு நியமனம் செய்தது. மாணவர்களின் நலன் கருதியும் பகுதிநேர ஆசிரியர்களின் நலன் கருதியும் எங்களை முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராதா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக