முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

செவ்வாய், 10 ஜூன், 2014

போக்குவரத்துக்கே போதாத சம்பளம்! பரிதவிக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்

கோவை : தொலைதூரப் பள்ளிகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கே சம்பளம் போதாமல், மிகவும் பின்தங்கிய பொருளாதார சூழலில் பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் பரிதவித்து வருகின்றனர்.

தமிழகத்தில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், 16 ஆயிரத்து 500 பேர் மாநிலம் முழுவதும் பகுதி நேர ஆசிரியர்களாக ரூபாய் 5000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில், தனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளிகளில் குறைந்த ஊதியத்தில் சேர்ந்தனர். இப்பிரிவை சேர்ந்த ஆசிரியர்களுக்கு, மருத்துவ காப்பீடு, பி.எப்., பணி நிரந்தரம், வருகை பதிவு போன்ற எந்த சலுகைகளும் இல்லை.

பெரும்பாலான ஆசிரியர்கள் தினமும் 70 கி.மீ முதல் 150 கி.மீ., வரை தொலைவுள்ள பள்ளிகளுக்கு பயணம் சென்று பணி செய்யவேண்டியுள்ளது. போக்குவரத்துக்கு ஒவ்வொரு மாதமும், ரூ. 1500 முதல் 2500 வரை செலவு செய்யவேண்டியுள்ளது. இதனால், ஊதியம் என்பது உதவாமல் போகின்றது. 

தொலைதூரங்களில், பணியில் அமர்த்தப்பட்டுள்ளதால், மூன்று மணி நேரம் வேலையாக இருந்தாலும், முழுநாளும் பயணத்திலே கழிந்துவிடுவதால், பிற பகுதி நேர வேலைகளையும் செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,'பணியில் சேரும்போது இருப்பிட சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என்று வாங்கினார்கள். ஆனால், 80 சதவீதத்தினருக்கு 70 கி.மீ., முதல் 150 கி.மீ., வரை தொலைவிலுள்ள பள்ளியில் பணியமர்த்தப்பட்டுள்ளோம். 

வால்பாறையிலிருந்து பொள்ளாச்சிக்கும், அன்னூரிலிருந்து கோவையில் போக்குவரத்து வசதிகள் கூட இல்லாத கிராமப்பகுதிகளிலும் பணியமர்த்தியுள்ளனர். இரு சக்கர வாகனமாக இருந்தாலும், பேருந்தாக இருந்தாலும் சம்பளத்தின் பெரும்பகுதி போக்குவரத்திற்கே செலவிடுகிறோம். மீதம் உள்ள ஊதியத்தில் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய இயலாத நிலையில் உள்ளோம். 

கடந்த மூன்று ஆண்டுகளாக ஊதிய உயர்வோ, வேறு எந்த சலுகையோ இல்லை' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக