முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 4 நவம்பர், 2013

"ஸ்பெஷல் பீஸ்' என்னாச்சு... தலைமையாசிரியர்கள் தவிப்புக்கு இன்று முடிவு - tnkalvi

மாணவர்களுக்கான சிறப்புக் கட்டணம் (ஸ்பெஷல் பீஸ்) இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாததால், மதுரையில் இன்று நடக்கும் கல்வி அதிகாரிகள் கூட்டத்தில், தலைமையாசிரியர்கள் இப்பிரச்னையை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு 2008ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் டிச.,க்குள் சிறப்பு கட்டணத்தை அரசு வழங்கி வருகிறது. இதில், பள்ளிப் பராமரிப்பு, மருத்துவ முகாம், சாரணர் இயக்கம், என்.எஸ்.எஸ்., திட்டம், என்.சி.சி., செயல்பாடு, ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகளுக்காக இப்பணத்தை தலைமையாசிரியர் பயன்படுத்துவார்.இரண்டு ஆண்டுகளாக இக்கட்டணத்தை அரசு வழங்கவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்த பணம் ரூ. 25 ஆயிரம் வரை செலவிட்டனர். 

இந்நிலையில், நீண்ட மாத இழுபறிக்கு பின், சிறப்புக் கட்டண நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. ஆனால், பள்ளிகளுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை. இதில், பல தலைமையாசிரியர்கள் ஓய்வு பெற உள்ளதால், செலவழித்த தொகையை திரும்ப பெற முடியாத நிலையில் தவிக்கின்றனர். 
அவர்கள் கூறுகையில், ""இன்று (நவ.,4) மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அனைத்து தலைமையாசிரியர்கள் கூட்டம், முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமையில் நடக்கிறது. இதில், சிறப்பு கட்டணம் பிரச்னையை எழுப்ப முடிவு செய்துள்ளோம்,'' என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக