முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 4 நவம்பர், 2013

"நாம் இருவர்; நமக்கு இருவர்": கவலைக்கிடமான அரசு பள்ளி - tnkalvi

மசினகுடி அருகே, சிங்காரா ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 2 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அவர்களுக்கு 2 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். இப்பள்ளியை, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து மாணவர்களின், எண்ணிக்கையை உயர்த்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள, சிங்காரா மின்நிலையம் பகுதியில், கடந்த 1951ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. அப்போது, மின் நிலையத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களின் குழந்தைகள், அங்கு கல்வி பயின்று வந்தனர். நாளடைவில் பணிகள் குறைந்து, அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்த காரணத்தால் பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கை குறையத் துவங்கியது.

தற்போது இங்கு மாணவர்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தை தொட்டுள்ளது. இப்பள்ளியில் ஒரு தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் என இரண்டு பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். நான்கு மாணவர்கள் மட்டுமே ரெகுலராக வந்து செல்வதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நாம் சென்று பார்த்த நாளில், இப்பள்ளிக்கு 4ம் வகுப்பு மாணவி திவ்யா, 5ம் வகுப்பு மாணவன் மணிகண்டன் ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர். இவர்களும், சிங்காரா சேர்ந்த மாணவர்கள் இல்லை; 7 கி.மீ., தொலைவில் உள்ள மசினகுடி பகுதியில் இருந்து, பேருந்தில் வந்து செல்கின்றனர். சிங்காரா பள்ளி நிலவரம் குறித்து, மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக