கோவை, :தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாவட்ட சிறப்பு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் விவேகானந்தன் தலைமை வகித்தார். தேர்தல் அதிகாரிகள் முத்துசாமி, இந்திராணி ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
இதில், மாவட்ட தலைவராக செந்தில்குமார், செயலாளராக ஆனந்தகுமார், பொருளாளராக கிருஷ்ணவேணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து நடந்த கூட்டத்தில், மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெற இருக்கின்ற அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும், அவரவர் பகுதி நேரமாக பணிபுரிந்த பகுதி நேர பணிக்காலத்தில் 50 சதவீதம் ஓய்வூதியத்துக்கு கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியம் பெறும் வகையில் ஆணை வெளியிட வேண்டும். 1.1.2006க்கு முன் தேர்வு நிலை பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தரவூதியம் ரூ.5400 வழங்க ஆணையிட வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வரும் 271 தொகுப்பூதிய தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்கப்பட வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடம் உருவாக்கி தொழிற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
தொழிற்கல்வி பாடப்பிரிவில் தற்போது உள்ள பாடத்திட்டத்தை மாற்றி நவீன தொழிற்நுட்பத்துக்கு ஏற்ற வகையில், புதிய பாடநூல்கள் தயாரித்து வழங்க வேண்டும்.
மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர், உதவி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Thanks - Dinakaran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக