By கடலூர்
First Published : 08 October 2013 05:40 AM IST
மத்திய அரசு பங்களிப்போடு, மாநில அரசும் பங்களிப்பை அளித்து ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலர் நடராஜன் தலைமையில் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
மாவட்டத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் வரவேற்றார். நிர்வாகிகள் கோவிந்தன், தமிழ்வேந்தன், ராமமூர்த்தி, பச்சைவாழி, சுதா முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ஓவியர் ரமேஷ் சிறப்புரையாற்றினார்.
இக் கூட்டத்தில் மத்திய அரசு வழங்குகிற தொகுப்பூதியம் ரூ.5,000 மாநில அரசின் பங்களிப்பையும் சேர்த்து பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தித் தர வேண்டும்.
பெண் ஆசிரியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Thanks - Dinamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக