முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 10 அக்டோபர், 2013

பணி நிரந்தரம்: பகுதிநேர ஆசிரியர்கள் மனு

By dn, விருத்தாசலம்
First Published : 09 October 2013 05:13 AM IST

தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

மனு விவரம்: பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு வழங்க வேண்டும். ஆசிரியைகளுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு முழுநேரப் பணி வழங்கி, காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை சங்கத்தினர் மனுவில் முன்வைத்துள்ளனர்.

Thanks - Dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக