முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

பாடப்புத்தகம் தயாரிக்கும் பணி தொடக்கம் பத்தாம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை

அடுத்த கல்வி ஆண்டில் இருந்து 10ஆம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை அமலுக்கு வருகிறது. அதற்கான பாடப்புத்தகங்கள் இப்போதே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பு வரை இந்த முறை அமலில் உள்ளது. இதன்படி சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை 3 பருவமாக பிரித்து, ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனி அக, புற மதிப்பீடு வழங்கப்பட்ட தேர்ச்சி கணக்கிடப்படுகிறது.

அக மதிப்பீட்டு தேர்வாக பல்வேறு பயிற்சி பணிகள் வழங்கப்படுகின்றன. இந்த புதிய முறைப்படி மாணவர்களின் கற்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

வரும் 2014,15ஆம் கல்வி ஆண்டு முதல் எஸ்எஸ்எல்சிக்கும் முப்பருவ கல்வி முறை அமலுக்கு வர உள்ளது. இதற்காக இப்போதே பாடப் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 10ஆம் வகுப்பிற்கான முப்பருவ கல்வி முறையில் ஜூன் முதல் செப்டம்பருக்குள் முதல் பருவ பாடத்திட்டம் கற்பிக்கப்படும். 

அக்டோபர் முதல் டிசம்பருக்குள் 2ஆம் பருவ பாடத்திட்டமும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 3ஆம் பருவத்திற்கும் பாடத்திட்டங்கள் கற்று கொடுக்கப்படும். 

ஒரு பாடத்திற்கான மதிப்பெண்களில் 40 மதிப்பெண் உள் மதிப்பீடாக வழங்கப்படும். இது மாணவர்களின் தனித்திறன்களான கட்டுரை, யோகா போன்றவைகளுக்கு வழங்கப்படும். 

60 மதிப்பெண் எழுத்து தேர்வுக்கு வழங்கப்படும். அரசு பொதுத்தேர்வாக அறிவித்தாலும் கிரேடு முறையை கடைப்பிடிக்கப்பட உள்ளது. 

மதிப்பெண்கள் 91 முதல் 100 வரை கிரேடு ஏ1 எனவும், 81 முதல் 90 வரை ஏ2 எனவும், 71 முதல் 80 வரை பி1 எனவும், 61 முதல் 70 வரை பி2 எனவும் அழைக்கப்படும். 51 முதல் 60 வரை சி1 எனவும், 41 முதல் 50 வரை சி2 எனவும், அழைக்கப்படும். 20 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தால் இ2 கிரேடு என அழைக்கப்படும், 

இ2 கிரேடு எடுத்தவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும். 

பள்ளிக்கல்விதுறை பரிந்துரை தமிழகத்தில், 10ஆம் வகுப்பு தேர்வு அரசு பொதுத்தேர்வாக இருந்தால் மட்டுமே கல்வித்தரம் சிறப்பாக இருக்கும். பள்ளிகளில் தேர்வு நடத்தப்பட்டால் கல்வியின் தரம் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே எஸ்எஸ்எல்சி சமச்சீர் முப்பருவ கல்வி முறை தேர்வுகளையும் அரசு பொதுத்தேர்வாகவே நடத்த வேண்டும் என அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக, அரசு இறுதி முடிவு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக