நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அனைத்து
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் ஆகஸ்டு 10 ஆம்
தேதி நாமக்கல்லில் நடைப்பெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டு பகுதிநேரச் சிறப்பு ஆசிரியர்களின் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் பள்ளிகளுக்கு தூணாக
விளங்கும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு முழுநேரப் பணி வழங்கி, காலமுறை
ஊதியத்துடன் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டது.
மேலும் E.C.S முறையில் ஊதியம்
வழங்க வேண்டும். கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் பிடித்தம் செய்யப்பட்ட
நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
நன்றி - கடலூர் திரு. செந்தில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக