கோவை : பணிநீக்கம் செய்யப்பட்ட மேல்நிலைப்பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மாற்றாக பகுதிநேர ஆசிரியர்களை, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்க கல்வித்துறை கட்டாயப்படுத்துவதால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் தமிழக மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வந்த 657 ஆசிரியர்கள் போதிய கல்வி தகுதி இல்லாத காரணத்தால் பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் பணி நீக்கம் செய்து அறிவித்தது. ஏற்கனவே கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தும், இப்பணிநீக்கத்தால் மாற்று ஆசிரியர்களும் இல்லாத பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களை பாடங்கள் நடத்த பள்ளிக்கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேல்நிலை வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் முதுநிலை பட்டத்துடன் பி.எட் முடித்து இருக்கவேண்டும். ஆனால் வெறும் பி.எஸ்.சி., பி.எட்., படித்த பகுதி நேர ஆசிரியர்கள் மேல்நிலைப்பாடங்களை கையாள முடியாமல் திணறுகின்றனர்.
பகுதி நேர ஆசிரியர்கள் வாரத்துக்கு 3 நாட்கள் மட்டும் (அரை நாள்) ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக பணி நியமனம் செய்யப்பட்டனர். தற்போது, ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களை விடுத்து பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு பாடம் நடத்த எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கட்டாயப் பணி கொடுக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்கள் கூறுகையில், "சமீபத்தில் 657 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாற்றாக எங்களை மேல்நிலை வகுப்புகளுக்கு பாடம் எடுக்க கூறுகின்றனர். எங்களுக்கு, பிளஸ் 2 மாணவர்களின் அடிப்படை பாடத்திட்டம் என்ன, கற்றுக்கொடுக்கும் விதம், பாடங்களின் தன்மை, செய்முறை வகுப்புகளை கையாளும் விதம் சார்ந்த அடிப்படை எதுவும் தெரியாத பட்சத்தில் பாடங்களை நடத்த சிரமப்படுகின்றோம்.
அதுவும் வாரத்தில் 3 நாட்களில் குறிப்பிட்ட பாடவேளை மட்டுமே எடுக்கின்றோம். மீதம் உள்ள நாட்களில் இடைநிலை ஆசிரியர்கள் எடுப்பதால் மேலும், மாணவர்களுக்கு குழப்பமே அதிகரிக்கும். எங்களுக்கு எவ்வித பயிற்சிகளும் இல்லாமல், அனுபவமும் இல்லாமல் பிளஸ் 2 பாடங்களை எவ்வாறு கையாள்வது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்." என்றனர்.
மேலும்,நடக்கவிருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களின் பணி நியமனம் இல்லை என்பதால் அதன் மூலம் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படமாட்டார்கள்.கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது என்று தெரியாமல் உள்ளதால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
நன்றி - தினமலர்
who are completed M.sc B.ed or M.C.A., B.Ed., in part time teacher those candidate can take the class. But in my district (namakkal) anybody did not advised to take class for higher secondary
பதிலளிநீக்கு