முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 17 ஆகஸ்ட், 2013

12வது உலகத்தமிழ் இணைய மாநாடு மலேசியாவில் துவங்கியது- சொ.ஆனந்தன்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 12வது உலகத்தமிழ் இணைய மாநாடு, நேற்று முன்தினம் கோலாகலமாகத் துவங்கியது.

இதில், 650க்கும் மேலான அறிஞர்கள் கலந்து கொண்டனர். மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள, "பெர்டானாசிஸ்வா' அரங்கத்தில், துவங்கிய மாநாட்டில், "இதுவரை தமிழ் இணையம்' என்ற தலைப்பில், மல்டி மீடியா விளக்கக் காட்சி காண்பிக்கப்பட்டது.



அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கான்பூர் ஐ.ஐ.டி., தலைவரும், "இன்பிட்' நிறுவனத்தின், கவுரவ ஆலோசகருமான, பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் பேசியதாவது:இந்திய மொழிகளிலேயே, தமிழ் மொழிக்குத் தான், உலக அளவில், இத்தனை மாநாடுகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கென நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டு கட்டுரை புத்தகத்தில், வெளியாகி உள்ள, 100 ஆராய்ச்சிக் கட்டுரைகளும், தரமானவை.தமிழில், "மெஷின் டிரான்சிலேஷன்' செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அப்போது தான், "விக்கி பீடியா' போன்ற, தகவல் களஞ்சியங்களில் உள்ள, பல லட்சக்கணக்கான ஆங்கிலம் மற்றும் மற்ற மொழிகளில் உள்ள தகவல்கள், தமிழில் வெளிவர இயலும். அதற்கு, குறைந்தபட்சம், இரண்டு லட்சம் வார்த்தைகளாவது, தமிழில் சேர்க்கப்பட வேண்டும். அதற்கான பணியை, இளைஞர்கள் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

மாநாட்டுத் துவக்க விழாவின் தலைமை விருந்தினர், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை அமைச்சர், டத்தோஸ்ரீ அகமது ஷபெரிசீக், ""மலேசியாவில் பெரும் பகுதி மக்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்துகின்றனர். தாய்மொழிகளில் அவற்றை பயன்படுத்த, முன்னுரிமை அளித்து, அதற்கான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை, மலேசிய அரசு மேற்கொள்ளும்,''  என்றார்.

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக