முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வியாழன், 18 ஜூலை, 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்கும் வழிமுறை

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு 21–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. 

இந்த தேர்வுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 664 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 32ஆயிரத்து 532 பேர் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துவிட்டனர்.

 8 ஆயிரம் பேர் ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க முயற்சி மேற்கொண்டும் அதில் வெற்றிபெறவில்லை.

27,500 விண்ணப்பத்தாரர்கள் ஹால்டிக்கெட்டை எடுப்பதற்கான முயற்சிகூட செய்வில்லை. 

பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தங்கள் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டு உள்ளனர் ( அதாவது எழுதி இருப்பது ஒன்று, ஷேடிங் செய்திருப்பது ஒன்று.

அத்தகைய விண்ணப்பதார்களுக்கு உதவும் வகையில் ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து எடுக்கும் முறை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) விண்ணப்ப எண்ணையும், ஏதாவது ஒரு பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் போதும். ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்து எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக