திண்டுக்கல்:தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட 16ஆயிரம் பேரையும் முழுநேர பணியாளராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டுக்கல்லில் பகுதி நேர ஆசிரியர்கள் மாநில கூட்டம் நடந்தது. தமிழக முதல்வர் 16 ஆயிரம் பேருக்கு பகுதி நேர ஆசிரியர் பணி வழங்கியுள்ளார். இவர்கள் ஐந்தாயிரம்ரூபாய் சம்பளத்தில் குடும்பம் நடத்தி, வீட்டு வாடகை, குழந்தைகளை படிக்க வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் மே மாதத்திலும், தேர்வு நாட்களிலும் சம்பளம் இல்லாமல் உள்ளது. 12 நாட்களுக்கு குறைவாக பணியாற்றினால் முழு சம்பளம் கிடைப்பதில்லை. இதனால் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை முழுநேர ஊழியர்களாக்க வேண்டும். இதற்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக