முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

புதன், 17 ஜூலை, 2013

நாணயத்தில் காமராஜர் ஓவியம்! பகுதி நேர ஓவிய ஆசிரியர் அசத்தல்


காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவத்தை 10 ரூபாய் நாணயத்தில் வரைந்து அசத்தியுள்ளார், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டையைச் சேர்ந்த செல்வம்.

ஓவியரான இவர் சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர கலை ஆசிரியராக பணிபுரிகிறார். கடந்த 8 ஆண்டுகளாக, தேசத் தலைவர்கள் மற்றும் தெய்வத்தின் படங்களை வித்தியாசமான முயற்சியில் வரைந்து அசத்தி வருகிறார். நாக்கு, மூக்கு, தாடி, தலைமுடி, கண் இமை, பல் ஆகியவற்றை தூரிகையாகக் கொண்டு பல ஓவியங்கள் வரைந்துள்ளார்.

தாய்ப்பாலின் அவசியம் குறித்த மணல் சிற்பம், சாக்பீஸில் தேசத் தலைவர்கள் படம், சோப்பில் தெய்வப் படங்கள் ஆகியவற்றை வரைந்துள்ளார். இதையடுத்து ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்தை 10 ரூபாய் நாணயத்தில் வரைந்துள்ளார். மேலும், நாணயங்களில் பல்வேறு தலைவர்களின் படத்தையும் வரைந்துள்ளார்.

இதுகுறித்து செல்வம் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளாக வித்தியாசமான முறையில் பல ஓவியங்களை வரைந்துள்ளேன். உலக சாதனை படைப்பதே லட்சியம் என்றார்.

நன்றி - தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக