முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

வெள்ளி, 21 ஜூன், 2013

காலையில் திருமணம், பிற்பகல் தேர்வு: மணமகளுடன் தேர்வில் பங்கேற்ற இளைஞர்

திருமணத்தன்று பகுதிநேர ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கும் தேர்வில் மணக்கோலத்தில் இருந்த மணமகளுடன் இளைஞர் ஒருவர் தேர்வில் கலந்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியின் மகன் கிருஷ்ணகோபி(29). இவர் எம்.ஏ., எம்.பி.எட் (உடல்கல்வி)படித்துள்ளார்.
சிவகங்கை அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 10 உடல்கல்வி ஆசிரியர், 4 ஓவிய ஆசிரியர் மற்றும் 1 தையல் ஆசிரியர் பகுதிநேர பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து உடல்கல்வி ஆசிரியர் பணிக்கு கிருஷ்ணகோபி விண்ணப்பித்திருந்தார்.
ஜூன் 19ஆம் தேதி (புதன்கிழமை) சான்றிதழ் சரிபார்க்கும் தேர்வுக்கு வரும்படி உடல்கல்வி ஆசிரியர் பணிக்கு 96 பேருக்கும், ஓவிய ஆசிரியர் பணிக்கு 50 பேருக்கும், தையல் ஆசிரியர் பணிக்கு 68 பேருக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இது போன்ற அழைப்புக் கடிதம் கிருஷ்ணகோபிக்கும் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இளையான்குடி முல்லியரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமையா மகள் ரா.சாந்தி (25) என்பவருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து புதன்கிழமை (ஜூன் 19) திருமணம் நடைபெற்றது. அதேவேளையில் பகுதிநேர ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்க வரும்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பியிருந்தது.
இதனால் புதன்கிழமை காலையில் திருமணத்தை முடித்துக் கொண்ட கிருஷ்ணகோபி, மணமகள் கோலத்தில் இருந்த தனது மனைவியுடன் பிற்பகலில் சிவகங்கை மருதுபாண்டியர் பள்ளியில் சான்றிதழ் சரிபார்க்க வந்திருந்தார். மணக்கோலத்தில் வந்த தம்பதியினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
நன்றி - தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக