"உலகத்தையே மாற்றக் கூடிய பெரும் சக்தி
ஆசிரியர்களுக்கு உண்டு" என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக
துணைவேந்தர் விஸ்வநாதன் பேசினார்.
கள்ளக்குறிச்சி டாக்டர் ஆர்.கே.எஸ்.,
கல்வியியல் கல்லூரியில் பி.எட்., பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் 200
மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக் கழக துணை வேந்தர் விஸ்வநாதன் பேசியதாவது:
மாணவர்களுக்கு
நல்ல வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். இந்த உலகத்தையே மாற்றக்
கூடிய பெரும் சக்தி உங்களுக்கு உண்டு. இந்த சாதனையை ஆசிரியர்களால் தான்
செய்ய முடியும். சமுதாயத்தில் ஒரு முக்கிய அங்கமாக ஆசிரியர்கள்
திகழ்கின்றனர்.
கல்வி நிறுவனங்கள் பாடங்களை மட்டும் போதிப்பது இல்லை. திறமை மிகுந்தவர்களை உருவாக்கி தருவதிலும் கவனம் செலுத்துகிறது. நமக்கு வரும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்." இவ்வாறு விஸ்நாதன் பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக