மதுரை: மதுரையில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி
சார்பில், வட்டார செயலாளர்கள் கூட்டம், தலைவர் முத்துக்குமரன் தலைமையில்
நடந்தது. செயலாளர் உக்கிரபாண்டியன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தென்னவன்
பங்கேற்றார்.
ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக, மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும்; செப்டம்பரில் மாநில அளவில் தொடர் மறியல் போராட்டங்கள் நடத்துவது; இதையொட்டி ஜூலையில், மாவட்ட ஆயத்தக் கூட்டங்கள் நடத்துதல்; டி.இ.டி., தேர்வை ரத்து செய்ய வேண்டும்; அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நியமிக்கப்பட்ட, பகுதிநேர ஆசிரியர்களின் பணியிடங்களை நிரந்தரப்படுத்த வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Thanks - Dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக