முக்கியச் செய்தி

தமிழகம் முழுவதும் நடைப்பெற்று வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களின் சங்க கூட்ட விவரங்களை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி www.ssaptst.blogspot.in என்ற இணையத்தளத்தில் வெளியிட வேண்டுகிறேன். அன்பார்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களே! தாங்கள், தங்கள் ஒன்றியப் பொறுப்பாளர்களிடம் சங்க உறுப்பினர் விண்ணப்ப எண் மற்றும் சந்தா எண் பெற்று குறித்து வைத்துக்கொள்ளவும்.

சனி, 4 மே, 2013

சம்பளம் வழங்க கோரி பகுதி நேர ஆசிரியர்கள் மனு

சிவகங்கை: மே மாத சம்பளம் வழங்கக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.
பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், கம்ப்யூட்டர் பிரிவுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 2012 மார்ச்சில் நியமிக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் 257 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மே மாதம் விடுமுறை என்பதால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. தவிர பெரும்பாலான பகுதி நேர ஆசிரியர்கள் வெகு தூரத்தில் உள்ள பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாதந்தோறும் போக்குவரத்து செலவாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை செலவாகிறது.
மே மாதத்திற்கும் தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரி நேற்று பகுதி நேர ஆசிரியர்கள் சிவகங்கை முதன்மை கல்வி அலுவலரிடம் மனு கொடுக்க வந்தனர். அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் குமரேசன் தலைமையில் உதவித் தலைவர் மோகன்ராஜ், செயலாளர் துளசிதாஸ், பொருளாளர் செந்தில்குமார், துணைச் செயலாளர் பாபுஜி உட்பட பலர் வந்தனர். முதன்மை கல்வி அலுவலர் இல்லாததால், அவரது நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்தனர்.
மாவட்டத் தலைவர் குமரேசன் கூறுகையில், ‘மே மாத சம்பளம் வழங்கப்படவில்லை என்றால், வட்டிக்கு பணம் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். எங்களுக்கும் ரெகுலர் ஆசிரியர்களை போல் மே மாத சம்பளம் வழங்க வேண்டும். அதேபோல் வெகுதூரத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரிவதால் போக்குவரத்து செலவும் அதிகமாக உள்ளது. அருகில் உள்ள பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்ய கவுன்சலிங் நடத்த வேண்டும். மாத சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்‘ என்றார். 

நன்றி - தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக